< Back
சினிமா செய்திகள்
Actor Suriya offered darshan at Ranipet Narasimha Temple
சினிமா செய்திகள்

ராணிப்பேட்டை நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா

தினத்தந்தி
|
20 Nov 2024 1:41 PM IST

ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா சாமி தரிசனம் செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா சாமி தரிசனம் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருவரும் தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில், அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்