புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு நடிகர் சூரி வாழ்த்து
|கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணம் கடந்த 12-ந் தேதி கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
சென்னை,
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்" போன்ற படங்களில் நடித்து உள்ளார். 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார்.
தற்போது அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கடந்த 12-ந் தேதி இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
இந்தசூழலில், புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு பலவேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது அவர்களுக்கு நடிகர் சூரி வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மணவாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வாழ வாழ்த்துகள்!' இவ்வாறு தெரிவித்துள்ளார்.