< Back
சினிமா செய்திகள்
வாகன சோதனையின்போது சிக்கிய கஞ்சா: பிரபல நடிகர் கைது
சினிமா செய்திகள்

வாகன சோதனையின்போது சிக்கிய கஞ்சா: பிரபல நடிகர் கைது

தினத்தந்தி
|
17 Nov 2024 7:00 PM IST

வாகன சோதனையின்போது கஞ்சா வைத்திருந்த பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் பிஎஸ் பரிதுதீன். இவர் மலையாள சினிமா துறையில் சில படங்களில் நடித்துள்ளார். பாடகராகவும் உள்ள இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

இந்நிலையில், இடுக்கி மாவட்டம் புள்ளிக்கன்னம் பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த நடிகர் பிஎஸ் பரிதுதீனின் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் கஞ்சா மற்றும் எடிஎம்ஏ என்ற போதைப்பொருள் இருந்தது.

இதையடுத்து, காரில் இருந்த நடிகர் பரிதுதீன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்