< Back
சினிமா செய்திகள்
அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சிம்பு
சினிமா செய்திகள்

அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சிம்பு

தினத்தந்தி
|
19 Oct 2024 8:33 PM IST

நடிகர் சிம்பு தன் அடுத்த படம் குறித்து அப்டேட்டை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போது சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்" எனத் தெரிவித்துள்ளார். இதனால், இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இயக்குநர் யார் என்கிற குறித்த தகவல் எதுவும் இல்லை. அதேநேரம், தேசிங்கு பெரியசாமி படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

மேலும் செய்திகள்