< Back
சினிமா செய்திகள்
மரகத நாணயம் 2 படத்தில் நடிக்கும் சத்யராஜ்?
சினிமா செய்திகள்

'மரகத நாணயம் 2' படத்தில் நடிக்கும் சத்யராஜ்?

தினத்தந்தி
|
24 Oct 2024 10:29 AM IST

மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரகத நாணயம்'. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.

அதாவது இந்த படம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரும்பொறை எனும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயத்தை கைப்பற்ற முயற்சிக்கும் வகையில் நகைச்சுவையாக உருவானது. கடைசியில் அதை கைப்பற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த பாகத்தை தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோரும் மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிக்க போவதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவருகிறது. இந்தநிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது சத்யராஜ், இரும்பொறை மன்னன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்