< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
முருகன் கோவிலில் நடந்த நடிகர் பிரேம்ஜி திருமணம் - வீடியோ வைரல்
|9 Jun 2024 4:36 PM IST
நடிகர் பிரேம்ஜிக்கு எளிமையான முறையில் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
சென்னை,
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி . இவர் 'சென்னை 600028 - 1 மற்றும் 2, கோவா, சரோஜா, சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, மாநாடு'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு எளிமையான முறையில் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதில், இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். மேலும், நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றோர் கலந்து கொண்டனர்.
பிரேம்ஜி, மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.