நடிகர் 'பவர் ஸ்டார்' மருத்துவமனையில் அனுமதி
|பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
2011 ஆம் ஆண்டு 'லத்திகா' என்ற படத்தை இயக்கி தயாரித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக திரையில் தோன்றினாலும் அவரை காமெடியனாகவே மக்கள் ஏற்றனர். பின்னர் சந்தானம் தாயாரித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து 'ஐ', 'ஒன்பதுல குரு ' உள்ளிட்ட பல்வேறு படங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் நேற்று மாலை பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு வார காலம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையை மேற்கொள்ளவும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.