பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்
|ஆந்திராவின் துணை முதல்-மந்திரியான பவன் கல்யாணை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து அவரது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவிற்கு தனது வித்தியாசமான சிந்தனையின் மூலம் திரைப்படத்தை இயக்கி நடித்தும் வருகிறார் பார்த்திபன். அவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான டீன்ஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. டீன்ஸ் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆந்திராவின் துணை முதல்-மந்திரியான பவன் கல்யாணை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து அவரது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்கலகிரி கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. அங்கு அவர்கள் பலதரப்பட்ட விஷயங்கள் மற்றும் சமூக பிரச்சனைகளை குறித்து பேசினர்.
அப்போது பவன் கல்யாண், பார்த்திபனுக்கு கடவுள் சிலைகளை வழங்க, நடிகர் பார்த்திபன் பவன் கல்யாணுக்கு ஒரு வீரரின் ஓவியம், தான் எழுதிய பேனா, புத்தகம் ஆகியவற்றை கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், இது தொடர்பான வீடியோவை குறிப்பிட்டு "அரசியலற்ற ஆனந்தம்" என்று பதிவிட்டுள்ளார்.