< Back
சினிமா செய்திகள்
Actor Mohan Babu admitted to hospital
சினிமா செய்திகள்

நடிகர் மோகன்பாபு மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
11 Dec 2024 11:43 AM IST

நடிகர் மோகன்பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்,

நடிகர் மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், மோகன் பாபு வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படைபோலீசார் அதனை முறியடித்தனர்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை, மைக்கை வைத்து மோகன் பாபு தாக்கினார். இதில் காயமடைந்த 2 செய்தியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தெலுங்கானா பத்திரிகையாளர் சங்கம் போலீசில் புகார் அளித்தது.

அதனைத்தொடர்ந்து, நடிகர் மோகன் பாபு மீது தெலுங்கானா போலீசார் 118 பிஎன்எஸ் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தற்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்