நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
|போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு சென்னை ஐக்கோட்ர்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை,
சென்னை முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப்பொருட்களை விற்றதாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீசாரால் கைது செய்யப்பட்டனா். போலீசாரின் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்து கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஜெ.ஜெ. நகர் போலீசாரால் அலிகான் துக்ளக் கடந்த டிசம்பர் 4-ந் தேதிசெய்து சிறையில் அடைத்தனர்.
அலிகான் துக்ளக் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கோர்ட்டில் போதைப்பொருட்கள் எதுவும் தன்னிடம் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அதனை தொடர்ந்து அலிகான் துக்ளக் சென்னை ஐக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அலிகான் துக்ளக்கிடம் இருந்து எந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யவில்லை, மற்ற குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து துக்ளக் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜெ.ஜெ.நகா் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.