அஜித்தை புகழ்ந்த நடிகர் மாதவன்
|அஜித், ரேஸிங்கிற்கு தயாராகி வரும்நிலையில், அவரை நடிகர் மாதவன் புகழ்ந்துள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கினார். மேலும் இந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார். 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் அஜித் களமிறங்க உள்ளார்.
அதன்படி 2025 ஜனவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸிங்கில் அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் அணியுடன் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, அஜித் ரேஸிங்கிற்கு தயாராகி வரும்நிலையில், அவரை நடிகர் மாதவன் புகழ்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்திருக்கிறார். அதில்,
'அஜித்குமார் ரேசிங் அணி டிராக்கில் சீறிப்பாய்வதை காண ஆவலாக உள்ளேன். என்ன ஒரு அற்புதமான மனிதர். என்ன நடந்தாலும் அவரின் கனவுகளை நோக்கி சென்றுக் கொண்டே இருக்கிறார்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.