'பிளடி பெக்கர்' பட புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் கவின் நெகிழ்ச்சி
|'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
சென்னை,
பிரபல இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்நிலையில் 'பிளடி பெக்கர்' படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகர் கவின், அதனுடன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ' ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம்... அவனை ஏய், யோய், பிச்சைக்கார பயலே என்றெல்லாம் அழைப்பார்களாம்...' என்றும் 'இந்த திரைப்படம் எப்போதும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படம் வரும் 31-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதன்மூலம் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.