< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகர் பாலாவின் 'ராக்காயி' ஆல்பம் பாடல் வைரல்

தினத்தந்தி
|
5 Nov 2024 6:16 PM IST

சின்னத்திரை நடிகர் பாலா, நடிகை தேவதர்ஷியினின் மகளுடன் இணைந்து நடித்துள்ள ராக்காயி என்ற ஆல்பம் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கே.பி.ஒய் பாலா, திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தில் பாதியை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல் திரைப்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வரும் அவர், நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாலாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், திரைப்படங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கும் கே.பி.ஒய் பாலா தற்போது ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். ராக்காயி என்ற இந்த ஆல்பத்தில், பிரபல நடிகர் சேத்தன் மற்றும் நடிகை தேவதர்ஷியினின் மகளான, நியதி முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை, மு.வி.என்பவர் எழுதியுள்ளார்.

கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வருஷா பாலுவுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார். பிங்க் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பம் பாடல் அந்நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபல நடிகர் சேத்தன் மற்றும் நடிகை தேவதர்ஷியினின் மகளான, நியதி '96' படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் தனது மகளின் போட்டோ ஷூட் புகைப்படங்களை தேவதர்ஷினி வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தனது மகளையும் சினிமாவில் களமிறக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்