< Back
சினிமா செய்திகள்
என்னை சதியில் சிக்க வைக்க முயற்சி - நடிகர் பாலா புகார்
சினிமா செய்திகள்

என்னை சதியில் சிக்க வைக்க முயற்சி - நடிகர் பாலா புகார்

தினத்தந்தி
|
20 Oct 2024 5:46 PM IST

என்னை சதியில் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது என்று நடிகர் பாலா சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எர்ணாகுளம்,

தமிழில் 'அன்பு' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, 'காதல் கிசு கிசு', 'கலிங்கா', 'வீரம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குநர் 'சிறுத்தை' சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் பின்தொடர்ந்து பாலா துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், எர்ணாகுளத்திலுள்ள எடப்பள்ளி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கேரள போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை நடிகர் பாலா வெளியிட்டுள்ளார். அதில், அவரது வீட்டு வாசலில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் நிற்கிறார், அருகில் நிற்கும் இளைஞர், வீட்டின் ஹாலிங்பெல்லை அழுத்துகிறார். சிறிது நேரம் அங்கு நின்று விட்டு கதவு திறக்காததால் அவர்கள் செல்கின்றனர்.

இதுபற்றி நடிகர் பாலா, "இந்தசம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டேன். அதிகாலை 3.45 மணிக்கு என் வீட்டுக்கதவை தட்டியுள்ளனர். என்னை ஏதோ ஒரு வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது" என்று கூறியுள்ளார்

மேலும் செய்திகள்