'லப்பர் பந்து' பட புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் பால சரவணன்
|கடந்த வாரம் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான 'லப்பர் பந்து' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை,
கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'லப்பர் பந்து'. சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், 'லப்பர் பந்து' பட புகைப்படங்களை நடிகர் பால சரவணன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.