< Back
சினிமா செய்திகள்
நடிகர் அர்ஜுனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
சினிமா செய்திகள்

நடிகர் அர்ஜுனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

தினத்தந்தி
|
18 Nov 2024 12:31 AM IST

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய இணைமந்திரி எல்.முருகன் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர் 1992-ல் வெளியான 'சேவகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அர்ஜுன் மற்றும் இயக்குனர் பி.வாசுவுக்கு சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய இணைமந்திரி எல்.முருகன் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதேபோல் சினிமா துறையில் பிரபல இயக்குனர் பி.வாசுவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்