'கனவில் இருப்பதைபோல் உணர்ந்தேன்' - பிரபல நடிகருடன் நடித்ததை நினைவுக்கூர்ந்த நடிகை
|'ராவணாசுரன்' படத்தில் இடம்பெற்ற 'டிக்கா டிஷ்யூம்' பாடலுக்கு நடனமாடி திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் எடின் ரோஸ்.
சென்னை,
ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ராவணாசுரன்'. இப்படத்தில் இடம்பெற்ற 'டிக்கா டிஷ்யூம்' பாடலுக்கு நடனமாடி திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் எடின் ரோஸ். இப்படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இப்படத்தில் எடின் ரோஸ் ரோபோவாக நடிக்கிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய எடின் ரோஸ், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உடன் நடித்ததை நினைவுக்கூர்ந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
"விக்னேஷ் சிவன் சாரின் குழு, இப்படத்தில் ரோபோ பாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகினர். ரோபோவாக எனது சிறிய அசைவுகள், சைகைகள் கூட சரியாக இருக்க வேண்டும் என்பதால், நான் நிறைய வீடியோக்களைப் பார்க்கவும், ஏ.ஐ ரோபோக்களைப் பற்றி படிக்கவும் வேண்டியிருந்தது. என் காட்சிகள் எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் பிரதீப் சாருடன் மட்டுமே இருந்தன, நான் கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யா உடன் நடித்தபோது கனவில் இருப்பதுபோல் உணர்ந்தேன்' என்றார்.
கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை அடுத்த வருடம் கோடைக்காலத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.