< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

"நிறம் மாறும் உலகில்" படத்தின் 3வது பாடல் வெளியானது

தினத்தந்தி
|
7 March 2025 7:29 PM IST

அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில்’ படம் இன்று வெளியானது.

சென்னை,

இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தைப் பேசும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. நான்கு விதமான வாழ்க்கை, நான்கு விதமான கதை அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை பற்றி பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று வெளியானது.

தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் 3வது பாடலான 'ஆழி' வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்