தமிழில் 'ஆவேஷம்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
|மலையாளப் படமான 'ஆவேஷம்', ஓடிடியில் தமிழில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
'ரோமஞ்சம்' படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சஜின் கோபு, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைக்க, சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனை (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
இந்தப் படம் வெளியான முதல் 5 நாட்களில் ரூ. 50 கோடியைக் கடந்து சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடியை தாண்டியது. இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் மே 9-ம் தேதி வெளியானது. இந்நிலையில் அமேசான் பிரைம், வரும் 21-ம் தேதி 'ஆவேஷம்' படத்தை தமிழில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தமிழ் பதிப்பிற்கு தேவையான தணிக்கையை படக்குழுவினர் ஏற்கனவே முடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.