< Back
சினிமா செய்திகள்
Aasa Kooda song fame Preethi Mukundans Malayalam debut film begins with a pooja
சினிமா செய்திகள்

'ஆச கூட' பாடல் புகழ் பிரீத்தி முகுந்தன் மலையாளத்தில் அறிமுகமாகும் படம் பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
19 Nov 2024 12:38 PM IST

'ஆச கூட' ஆல்பம் பாடலில் நடனமாடி பிரபலமான பிரீத்தி முகுந்தன் தற்போது மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். அதனைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர், சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'ஆச கூட' ஆல்பம் பாடலில் நடனமாடி மேலும் புகழ் அடைந்த இவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார்.

அதன்படி, பிரீத்தி முகுந்தன் நடிக்க உள்ள இப்படத்திற்கு 'மைனே பியார் கியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், கதாநாயகனாக சமீபத்தில் வெளியான திரில்லர் படமான 'முரா' படத்தில் நடித்திருந்த ஹிருது ஹாரூண் நடிக்கிறார். பைசல் பாசிலுதீன் இயக்கும் இப்படத்தில், அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஆச கூட' பாடல் புகழ் பிரீத்தி முகுந்தன் முதல்முறையாக ஹிருது ஹாரூணுடன் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும் செய்திகள்