மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் நடிக்க விரும்பிய பிரபல தெலுங்கு நடிகர்
|பிரபல நடிகர் ஒருவர் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
சென்னை,
மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் உருவாகும் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அது வேறுயாரும் இல்லை, தற்போது திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வரும் 'தேவரா' பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்தான்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை கொண்ட சிறப்பை பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று அயர்ன் மேன்' என்றார்.
ஜூனியர் என்.டி.ஆர், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.