ஓடிடியில் வெளியாகும் 'வெட்னஸ்டே' நடிகையின் 'எ குட் கேர்ள்ஸ் கைடு டு மர்டர்'
|எம்மா மியர்ஸ் நடித்துள்ள 'எ குட் கேர்ள்ஸ் கைடு டு மர்டர்' ஓடிடியில் வெளியாக உள்ளது.
வாஷிங்டன்,
ஹாலிவுட் நடிகை எம்மா மியர்ஸ். இவர் கடந்த 2010-ல் வெளியான தி கிலேட்ஸில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர், ஜென்னா ஓர்டேகாவின் நடிப்பில் வெளிவந்த 'வெட்னஸ்டே' சீரிசில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இவர் தற்போது மற்றொரு சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இதற்கு 'எ குட் கேர்ள்ஸ் கைடு டு மர்டர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரிசின் முதல் சீசனில் மொத்தம் 6 எபிசோடுகள் உள்ளன. இதில், தன்னுடன் பயின்ற சக மாணவரின் கொலையில் உள்ள மர்மத்தை விலக்கி கொலையாளியை கண்டுப்பிடிக்கும் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் எம்மா மியர்ஸ்-பிப்பா பிட்ஸ் அமோபியாக நடித்துள்ளார். மேலும், ஜைன் இக்பால், லில்லி டேவிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த சீரிசின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.