< Back
சினிமா செய்திகள்
A few days after its release, the team of

image courtecy:instagram@vipindashb

சினிமா செய்திகள்

வெளியான சில நாட்களிலேயே 2-ம் பாகத்தை அறிவித்த 'வாழ' படக்குழு

தினத்தந்தி
|
28 Aug 2024 5:37 PM IST

'வாழ' படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக விபின் தாஸ் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

சினிமா திரையுலகில் ஒரு படம் வெற்றியடைந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக அடுத்த பாகங்களை எடுப்பது இயல்பாக உள்ளது. ஆனால், ஒரே பெயர் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது ஒரு ஆச்சரியமான நிகழ்வு. அதன்படி, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் வெளியான சில நாட்களிலேயே அதே பெயரில் மலையாளத்தில் ஒரு படம் வெளியானது.

தற்போதும், இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'வாழை' படம் சமீபத்தில் வெளியானது. இதேபோல, மலையாளத்திலும் 'வாழ' என்கிற பெயரில் சில நாட்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இவ்விரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

மலையாள படமான 'வாழ' படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

சவின் இயக்கி இருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக விபின் தாஸ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்