< Back
சினிமா செய்திகள்
A deleted scene from Kalki 2898 AD has gone viral on the internet
சினிமா செய்திகள்

'கல்கி 2898 ஏடி' படத்தின் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரல்

தினத்தந்தி
|
3 Sept 2024 8:15 AM IST

'கல்கி 2898 ஏடி' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.

கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், இதுவரை உலகம் முழுவதும் ரூ,1,050 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. இதனையடுத்து, 'கல்கி 2898 ஏடி' எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

எதிர்பார்த்தப்படி கல்கி 2898 ஏடி கடந்த மாதம் 22-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. சுமார் 3 நிமிட நீளம் கொண்ட இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்