< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த படம் காந்தாரா
|16 Aug 2024 3:19 PM IST
2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரைப்படமான காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. மேலும் இந்த படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.