< Back
சினிமா செய்திகள்
55வது சர்வதேச திரைப்பட விழா- சிறந்த வெப்தொடர் விருதுக்கு அயலி பரிந்துரை
சினிமா செய்திகள்

55வது சர்வதேச திரைப்பட விழா- சிறந்த வெப்தொடர் விருதுக்கு 'அயலி' பரிந்துரை

தினத்தந்தி
|
17 Nov 2024 9:16 PM IST

55வது சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்படும் நிலையில், சிறந்த இணையத்தொடர் பிரிவில் தமிழில் வெளியான 'அயலி' வெப்தொடர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8-ம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார். வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த மற்ற சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகியுள்ளது. மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயலி. இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி, அதிகாரம், அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும்.

'அயலி' வெப்தொடர் கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அயலி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு இந்த திரைப்பட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்படும் நிலையில், சிறந்த இணையத்தொடர் பிரிவில் தமிழில் வெளியான 'அயலி' வெப்தொடர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதில், காலாபாணி, கோட்டா பேக்டரி, லாம்பான், ஜூப்ளி ஆகிய மற்ற மொழி இணைய தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்