ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள ஹாரர் படங்கள்
|மலையாள ஹாரர் படங்கள் ஓடிடியில் உள்ளன.
சென்னை,
பாலிவுட் படங்களோடு போட்டியிடும் அளவிற்கு நல்ல தென்னிந்திய படங்கள் தற்போது வெளியாகின்றன. இதனால் நாடு முழுவதும் தென்னிந்திய படங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு மிக முக்கிய பங்கு மலையாள படங்களுக்கு உண்டு. மலையாளத்தில் ஹாரர் படங்கள் குறைவு என்றாலும், சில நல்ல ஹாரர் படங்கள் ஓடிடியில் உள்ளன. அதன்படி, டாப் 5 மலையாள ஹாரர் படங்களை தற்போது பார்க்கலாம்.
1.பிரமயுகம்(bramayugam)
ராகுல் சதாசிவம் எழுதி இயக்கிய இப்படத்தில் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வெளியான இப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் உள்ளது.
2.எஸ்ரா(Ezra)
பிரித்விராஜ், பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஜெயகிருஷ்ணன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தை டிஸ்னி பிள்ஸ் ஹாட்ஸ்டாரில் கணலாம்.
3.நீல வெளிச்சம் (Neelavelicham)
ஆசிக் அபு இயக்கி கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் டொவினோ தாமஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நீல வெளிச்சம் தற்போது அமேசான் பிரைமில் உள்ளது.
4.9
பிரித்வி ராஜ், பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை ஜென்சு முகமது இயக்கினார். இப்படத்தை தற்போது அமேசான் பிரைமில் காணலாம்.
5. பீனிக்ஸ்(Phoenix)
விஷ்ணு பரதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் அபிராமி போஸ், சந்துநாத், நில்ஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் தற்போது அமேசான் பிரைமில் உள்ளது.