நடிகர் சிம்புவின் 40 ஆண்டு சினிமா பயண வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்
|நடிகர் சிம்பு தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 40 ஆண்டு ஆனதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் உருவாக்கி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சென்னை,
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான டி ராஜேந்திரன் அவரின் மகனாக சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றார்.
தனது தந்தை இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிம்பு தற்போது சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.
இவர் கடந்த 2002ம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய 'காதல் அழிவதில்லை' என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தம், அலை, கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி என தொடங்கி கடைசியாக பத்து தல வரை நடித்திருக்கின்றார். சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர் மற்றும் சிறந்த டான்ஸராகவும் அறியப்பட்டார். தொடர்ந்து சினிமாவில் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த நடிகர் சிம்பு இடையில் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளாமல் நடிகர் சங்கம் சார்பாக ரெக்கார்ட் கொடுக்கப்பட்டது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சிம்பு உடல் எடை கூடி படங்களில் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இப்படி பல பிரச்சினைகள் இவரை சுற்றி வளம் வர சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து மாநாடு என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சிம்பு சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளான நிலையில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகிறார்கள்.அதிலும் நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்த படங்கள் அனைத்தையும் சேர்த்து அதில் சிம்பு பேசும் வசனங்களையும் இணைத்து ஒரு வீடியோவாக தயார் செய்து இணையதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சிம்பு ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
தேசிங்கு பெரியசாமி மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.