ஒரே நாளில் திரைக்கு வரும் 4 படங்கள்
|வருகிற செப்டம்பர் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
சென்னை,
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
1. தேவரா : நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படமான 'தேவரா' படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இது ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த படமாக உருவாகி உள்ளது.
2. மெய்யழகன் : நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
3. பேட்ட ராப் : எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ளார்.
4. ஹிட்லர் : நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனர் தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.