< Back
சினிமா செய்திகள்
3 Most Anticipated Web Series to Release This Year
சினிமா செய்திகள்

இந்த ஆண்டு வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் வெப் தொடர்கள்

தினத்தந்தி
|
4 Jan 2025 7:35 AM IST

ஹாலிவுட் படங்களைபோல வெப் தொடர்களுக்கும் உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை,

ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல், ஹாலிவுட் வெப் தொடருக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெப் தொடர்கள் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்', 'வெனஸ்டே' மற்றும் 'ஸ்குவிட் கேம்' . இந்த தொடர்கள் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின.

'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5

இதுவரை 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'-ல் 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது 5-வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

'வெனஸ்டே' சீசன் 2

அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் 'வெனஸ்டே'. இதனை பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார்.

மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது. இதையடுத்து, இதன் 2-வது சீசன் உருவாகி வருகிறது. இந்த தொடர் வருகிற செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

'ஸ்குவிட் கேம்' சீசன் 3

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி, இந்தத் தொடரின் 2-வது பாகம் கடந்த மாதம் 26-ம் தேதி வெளியானது. இந்த தொடரின் 3-வது சீசன் இந்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்