< Back
சினிமா செய்திகள்
அரசாங்கத்தில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி கங்குவா பட நடிகையின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி
சினிமா செய்திகள்

அரசாங்கத்தில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி 'கங்குவா' பட நடிகையின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
16 Nov 2024 2:54 PM IST

நடிகை திஷா பதானியின் தந்தையிடம் மர்ம நபர்கள் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'லோபர்' திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. தொடர்ந்து 'எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த திஷா பதானி, அடுத்தடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது சூர்யா நடிப்பில் நேற்று வெளியான 'கங்குவா' திரைப்படம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை திஷாவின் தந்தை ஜக்தீஷ் சிங் பதானியிடம் மர்ம நபர்கள் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பரேய்லி கோட்வாலா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான ஜக்தீஷ் சிங் பதானிக்கு அரசாங்கத்தில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி, அவரிடம் 25 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் 5 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் 5 பேரும் நடிகை திஷா பதானியின் தந்தையிடம், தங்களுக்கு அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பலருடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளனர். இதை நம்பி திஷா பதானியின் தந்தை ரூ.25 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் சுமார் 3 மாதங்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால், இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்