< Back
சினிமா செய்திகள்
2024 was a tough year - Actress Malaika Arora
சினிமா செய்திகள்

'2024' கடினமான ஆண்டாக இருந்தது' - நடிகை மலைக்கா அரோரா

தினத்தந்தி
|
31 Dec 2024 12:22 PM IST

2024 தனக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்ததாக மலைக்கா அரோரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'உயிரே படத்தில் இடம்பெறும் "தையா தையா" என்ற பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார்.

பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்திய அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது அவர் நடன நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு இன்றுடன் முடிவடைய உள்ளநிலையில், 2024 தனக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்ததாக மலைக்கா அரோரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

'நான் உன்னை(2024) வெறுக்கவில்லை. ஆனால் நீ எனக்கு சவால்கள், மாற்றங்கள் மற்றும் கற்றல் நிறைந்த ஒரு கடினமான ஆண்டாக இருந்தீருக்கிறாய். கண் இமைக்கும் நேரத்தில் இந்த உலகம் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதை நீ புரிய வைத்தாய். மேலும், என் மீது நம்பிக்கை வைக்கவும் கற்றுக்கொடுத்தாய்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்