'தேவரா பாகம்-1': இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா? ஜூனியர் என்.டி.ஆர் - புதிய போஸ்டர் வைரல்
|'தேவரா பாகம்-1' அடுத்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
சென்னை,
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. இப்படம் அடுத்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனுடன், 'பயத்தின் முகங்கள்' என்றும் பதிவிட்டு இருக்கிறது. இந்த போஸ்டரை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.