< Back
சினிமா செய்திகள்
‘ Now I understand why Prabhas is so beloved’ - Nidhhi Agerwal
சினிமா செய்திகள்

'அவர் மேல் ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது' - நிதி அகர்வால்

தினத்தந்தி
|
5 Dec 2024 12:28 PM IST

'ஈஸ்வரன்', 'கலக தலைவன்', 'பூமி' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிதி அகர்வால்.

சென்னை,

'ஈஸ்வரன்', 'கலக தலைவன்', 'பூமி' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிதி அகர்வால். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதன்படி, தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தநிலையில், பிரபாசுடன் பணிபுரிந்த அனுபவத்தை நிதி அகர்வால் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பிரபாஸ் மேல் ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு இப்போது புரிகிறது. அவர் கலப்படமில்லாத இதயம் கொண்டவர். பாக்ஸ் ஆபிஸ் கிங். அவருடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது' என்றார்.

மேலும் செய்திகள்