< Back
சினிமா செய்திகள்
 Daavudi song from Devara released
சினிமா செய்திகள்

வெளியானது 'தேவரா' படத்தின் 'தாவுடி' பாடல்

தினத்தந்தி
|
4 Sept 2024 5:34 PM IST

தேவரா' படத்தின் 3-வது பாடலான 'தாவுடி' வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதனையடுத்து 3-வது பாடலான 'தாவுடி' இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது, 'தாவுடி' பாடல் வெளியாகி உள்ளது. வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் 'தேவரா' வெளியாக உள்ளநிலையில், 'தாவுடி' பாடல் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்