வணிகம்
வார இறுதியில் புதிய உச்சத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
வணிகம்

வார இறுதியில் புதிய உச்சத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

தினத்தந்தி
|
30 Aug 2024 6:18 PM IST

இந்திய பங்குச்சந்தை வார இறுதியில் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை கடந்த 7ம் தேதியில் இருந்து உயரத்தொடங்கியது.

இந்நிலையில், வார இறுதி நாளான இன்று இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்துடன் நிறைவடைந்துள்ளது. வர்த்தகம் தொடக்கியதும் நிப்டி 25 ஆயிரத்து 268 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர், ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான நிப்டி வர்த்த இறுதியில் 25 ஆயிரத்து 235 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேபோல், சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் 82 ஆயிரத்து 637 என்ற புள்ளியில் புதிய உச்சம் தொட்டது. அதன்பின்னர், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சென்செக்ஸ் வர்த்தக இறுதியில் 82 ஆயிரத்து 365 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

மேலும், வர்த்தகத்தின்போது மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 190 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. பின்னர் வர்த்தக இறுதியில் மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 161 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேவேளை, 51 ஆயிரத்து 437 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 466 என்ற புள்ளிகள் வரை வர்த்தகமானது. அதன்பின்னர், 51 ஆயிரத்து 351 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

மேலும், 23 ஆயிரத்து 712 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய பின் நிப்டி 23 ஆயிரத்து 718 வரை உச்சம் சென்றது. பின்னர், சுமார் 150 புள்ளிகள் வரை சரிவை சந்தித்த பின் நிப்டி 23 ஆயிரத்து 593 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இதனை தொடர்ந்து வர்த்தக இறுதியில் 23 ஆயிரத்து 637 என்ற புள்ளிகளில் பின் நிப்டி வர்த்தகத்தை நிறைவு செய்தது.

வார இறுதி நாளான இன்று இந்திய பங்குச்சந்தையில் நிப்டி, சென்செக்ஸ், மிட் கேப் ஆகியவை புதிய உச்சம் தொட்டுள்ளன. அதேவேளை, உச்சத்தில் உள்ள இந்திய பங்குச்சந்தை அடுத்த வாரம் முதல் இறக்கத்தை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்