சரிவில் இருந்து மீளும் இந்திய பங்கு சந்தை
|இந்திய பங்கு சந்தை சரிவில் இருந்து மீண்டு வருகிறது.
மும்பை,
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
அதன்பின்னர், மதியம் பங்கு சந்தை வீழ்ச்சியில் இருந்து மீளத்தொடங்கியது. ஆனாலும், வர்த்தக இறுதியில் பங்கு சந்தை இறக்கத்துடனே நிறைவடைந்தது.
இந்நிலையில், இந்திய பங்கு சந்தை இன்றும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியது முதல் பங்கு சந்தை இறக்கத்தில் வர்த்தகமானது. பின்னர், சரிவில் இருந்து பங்கு சந்தை மீண்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, பேங்க் நிப்டி 30 புள்ளிகள் ஏற்றம்பெற்று 51 ஆயிரத்து 813 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பின்நிப்டி 40 புள்ளிகள் ஏற்றம்பெற்று 23 ஆயிரத்து 350 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மிட்கேப் நிப்டி 24 புள்ளிகள் ஏற்றம்பெற்று 12 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேவேளை சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிவுடன் 80 ஆயிரத்து 350 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிப்டி 50 சற்று சரிவுடன் 24 ஆயிரத்து 450 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.