< Back
வணிகம்
4-வது நாளாக சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்
வணிகம்

4-வது நாளாக சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்

தினத்தந்தி
|
24 July 2024 5:21 PM IST

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிவை சந்தித்தன.

மும்பை,

வங்கி பங்குகளின் விற்பனை மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி, குறுகிய கால மூலதன ஆதாய வரியை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக நான்காவது நாளாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன.

பிஎஸ்இ சென்செக்ஸ் 280.16 புள்ளிகள் சரிந்து 80,148.88 புள்ளிகளில் நிலைபெற்றது. பகலில், இது 79,750.51 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிப்டி 65.55 புள்ளிகள் சரிந்து 24,413.50 புள்ளிகளாக இருந்தது.

பஜாஜ் பின்சர்வ் அதன் முதல் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் 2 சதவீதம் சரிந்தது. பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை சரிவை சந்தித்தன.

இருப்பினும் டெக் மஹிந்திரா, ஐடிசி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை லாபத்தில் கைமாறின.

2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பத்திர பரிவர்த்தனை வரியை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்ததால், முக்கிய பெஞ்ச்மார்க் குறியீடுகள் நேற்று நிலையற்ற வர்த்தகத்தில் ஓரளவு குறைந்தன.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிவை சந்தித்தன. நேற்று அமெரிக்க சந்தைகள் சற்று சரிவுடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) நேற்று ரூ. 2,975.31 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்