வணிகம்
முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
வணிகம்

முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தினத்தந்தி
|
21 July 2024 3:05 PM IST

உலக பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது கார் டிரைவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறாராம்.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காராராகவும் உலக பணக்காரர்களில் 11-வது இடத்திலும் முகேஷ் அம்பானி உள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி கோடி ஆகும். அண்மையில் தனது இளையமகன் ஆனந்த் அம்பானியின் மகன் திருமணத்தை உலகமே வியக்கும் அளவிற்கு மிகப்பிரம்மாண்டமாக முகேஷ் அம்பானி நடத்தினார். இந்தியாவில் உள்ள பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை பலரும் அம்பானி குடும்ப திருமண விழாவில் பங்கேற்றனர். இந்த திருமணத்திற்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடியை அம்பானி செலவு செய்தார். இது அவரது மொத்த சொத்து மதிப்பில் 0.5 சதவிகிதம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

அம்பானியின் வீட்டுச் சமையல்காரர்கள், காவல் ஆட்கள், வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் என அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பளமும், பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன.அம்பானியின் கார் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக 2017-ம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, டிரைவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறதாம்.

இப்போது அதைவிட கூடுதலாக சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அம்பானியின் கார் டிரைவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது பல தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தைவிட அதிகம் ஆகும். சவாலான நேரங்களிலும், மிகப் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதற்கு பயிற்சி வழங்கப்பட்டே அவர்கள் பணியில் நியமிக்கப்படுகிறார்களாம். அம்பானி குடும்பத்தினரிடம் இருப்பது குண்டு துளைக்காத கார்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்