தங்கம்
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு 4-வது நாளாக தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம் 

தங்கம்

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு 4-வது நாளாக தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

தினத்தந்தி
|
26 July 2024 10:14 AM IST

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்தது.

சென்னை,

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்தது. கடந்த 23-ந்தேதி ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 275 ரூபாயும், பவுனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாயும் குறைந்தது. தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறை என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக 4-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. வருகிற நாட்களிலும் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்