< Back
வணிகம்
2024 பட்ஜெட்:  வரிச்சலுகைகள் இருக்குமா?  அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
வணிகம்

2024 பட்ஜெட்: வரிச்சலுகைகள் இருக்குமா? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
20 July 2024 5:25 PM IST

தனிநபருக்கான விலக்கு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றம் வரும் 22 ஆம் தேதி கூடுகிறது. 23-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதில், வருமான வரி செலுத்துவோரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வரி கட்ட தேவையில்லை என்பதற்கான வருமான வரம்பை 2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், 5 முதல் 10 சதவீதம் வரை வரி விதிப்புக்கான வரம்பை, 5 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக உயர்த்த வேண்டும்:20 சதவீதத்துக்கான வரம்பை 18 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், 18 லட்சம் ரூபாய்க்கும் மேலான வருமானத்தை 30 சதவிகிதம் வரி விதிப்புக்கு கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

87ஏ விதியின்படி புதிய வரிவிதிப்பின்கீழ், 7 லட்சம் வரை மொத்த வருமானம் பெறுவோருக்கு 25 ஆயிரம் வரை வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போல், பழைய வரி விதிப்பின்படி 5 லட்சம் வரை 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. இதை 6 லட்சத்து 30 ஆயிரம் ரையிலான வருமானத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. .

இது தவிர, தனிநபருக்கான ரொக்க விலக்கு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதில் எந்த உயர்வும் இல்லை என்பதால், இந்த பட்ஜெட்டில் அதற்கான எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

மேலும் செய்திகள்