< Back
வணிகம்
அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பங்குச்சந்தையில் 5 ஆண்டுகள் தடை
வணிகம்

அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பங்குச்சந்தையில் 5 ஆண்டுகள் தடை

தினத்தந்தி
|
23 Aug 2024 12:34 PM IST

நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பிரபல தொழில் அதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்த தடையை விதித்துள்ளது. அனில் அம்பானிக்கு தடை மட்டுமின்றி ரூ.25 கோடி அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்திற்கு 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்