திருச்சி: என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டு கொலை
|போலீசாரால் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் கொலை, கொள்ளை உள்ளிட்ட 11 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்.
திருச்சி,
திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்த கொம்பன் ஜெகன் (வயது 30) என்பவருக்கு எதிராக 11 வழக்குகள் உள்ளன. இதனால், அவரை பிடிக்க காவல் துறையினர் முயற்சித்தனர். பல்வேறு இடங்களிலும் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், சனமங்கலம் பகுதியில் அவர் பதுங்கி இருக்கிறார் என கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிக்க முயன்றார்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் அவர் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த 19-ந்தேதி ஜெகனின் பிறந்தநாள் விழாவுக்கு, அவருடைய கூட்டாளிகள் ஆயுதங்களுடன் வந்திருந்தனர். அப்போது 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரால் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இந்த வழக்குகளுக்காக அவரை போலீசார் தேடி வந்தனர்.