< Back
மாநில செய்திகள்
ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
மாநில செய்திகள்

ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Jan 2024 6:19 PM IST

இந்தபேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை.

சென்னை,

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் தரப்பட்ட நிலையில்

சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இந்தபேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அரசு அளித்த பதிலில் தொழிற்சங்கங்கள் திருப்தி அடையவில்லை. இதனால் இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம் செய்ய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும் செய்திகள்