< Back
தேசிய செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நிலை கவலைக்கிடம்
தேசிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நிலை கவலைக்கிடம்

தினத்தந்தி
|
10 Sept 2024 12:32 PM IST

சீதாரம் யெச்சூரிக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 72 -வயதான சீதாராம் யெச்சூரி கடந்த மாதம் 19 ஆம் தேதி சுவாச தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்