< Back
தேசிய செய்திகள்
கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
6 Sept 2023 8:26 PM IST

பிரதமர் மோடி கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு புறப்பட்டு சென்றார்.

புதுடெல்லி,

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20-வது ஆசியான் மற்றும் இந்தியா மாநாடு நாளை நடைபெறுகிறது. இதேபோன்று, 18-வது கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இந்தோனேசியாவுக்கு இன்று இரவு புறப்பட்டு சென்றார்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மோடி அந்நாட்டுக்கு செல்கிறார். தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் பேச்சுவார்த்தையில், அந்த நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக, பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது, மையப்பொருளாக இருக்கும். மத்திய வெளியுறவு அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தி இருந்தது.

மேலும் செய்திகள்