< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடலூர்: கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
|5 Jun 2022 1:41 PM IST
கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடலூர் அருகே ஏ.குச்சிப்பாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணை அருகே தண்ணீருக்குள் சென்ற கர்ப்பிணி , நர்ஸ், மாணவிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி அடுத்தடுத்து பலியானார்கள். அவர்களது உடல்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் குளிப்பதற்காக சிறுமிகள் சுமுதா, பிரியா,மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி கவிதா மற்றும் இளம்பெண் நவநீதா ஆகியோர் சென்றிருக்கிறார்கள். தடுப்பணைக்கு அருகே ஏற்பட்ட சுழல் காரணமாக இரண்டு பேர் நீரில் மூழ்க , அவர்களைக் காப்பாற்ற சென்ற மற்ற 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் நீரில் மூழ்கி அடுத்தடுத்து பலியான சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.