< Back
தேசிய செய்திகள்
ராமர் கோவில் திறப்பு விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை
தேசிய செய்திகள்

ராமர் கோவில் திறப்பு விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை

தினத்தந்தி
|
18 Jan 2024 3:24 PM IST

ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏதுவாக அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, (வருகிற 22-ம் தேதி) அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களின் நம்பிக்கை உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அலுவலகத்தை அரை நாள் மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை விழா இந்தியா முழுவதும் 22 ஜனவரி 2024 அன்று கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 22, 2024 அன்று 2.30 மணி மூடப்படும். இது தொடர்பான உத்தரவு அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் வருகிற 22-ஆம் தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்ப அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். உலகமே உற்றுநோக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கி 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்