< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் மரணம்
|18 Aug 2024 8:03 PM IST
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
சென்னை,
இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநராக செயல்பட்டவர் ராகேஷ் பால். அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும், அதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
அவரின் உடலுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்த செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவருடன் செல்கிறார்.