< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|14 March 2024 5:19 PM IST
இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐகோர்ட்டு நீதிபதிகள், அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விபரங்கள் இல்லாமல் உள்ளது எனக் கூறி வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.